யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு (Video)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 08.01.2020 வெள்ளிக்கிழமை இரவு அரச இயந்திரத்தின் உத்தரவுடன் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குறித்த நினைவுத்தூபி தரைமட்டமான செய்தியை அறிந்த தமிழ் மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள்.
அன்றிரவில் இருந்தே பல்கலைக்கழக முன்றலில் பொலிஸாரின் அடக்குமுறைகளையும் மீறி ஏராளமான உணர்வாளர்கள் குவிந்திருந்தனர். நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்புக்களை காத்திரமாக முன்னெடுத்தனர்.
தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் துணைவேந்தருடனான சந்திப்பை அடுத்து இந்தப் போராட்டத்தினை இடைநிறுத்துவதாக தாங்களாகவே முடிவெடுத்து ஊடகங்களுக்கு அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு விஞ்ஞான பீட மாணவர்கள் உறுதியுடன் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறியதை அடுத்து மேலும் சில மாணவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
தற்போதும் குறித்த மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
Post a Comment