வல்லரசுகளின் நலன்களுக்காக தொடர்ந்தும் பலிக்கடாவாக்கப்படும் தமிழ் மக்கள் (Video)

 


ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு  பலஸ்தீனம் ஆயுதப் பயிற்சி வழங்கிய ஓர் அரசியல் அன்று இருந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் அதே பலஸ்தீனம் மஹிந்த ராஜபக்சவுக்கு உயரிய விருதினை வழங்கியது. இத்தகைய அரசியல் மாற்றத்துக்கு என்ன காரணம்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

இன்று இருக்கிற தமிழ் அரசியல் தரப்பில் எத்தனை பேர் அமெரிக்கா விரும்பாத பலஸ்தீனத்தோடு அடையாளப்படுத்த தயாராக இருக்கினம்.  மேற்கு நாடுகள் விரும்பாத எதையுமே வாய்திறந்து கதைக்க எம் அரசியல் தரப்புகள் தயாராக இல்லை.  இந்த யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆபிரிக்கன் நாடுகள் யூனியனை சந்திக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.  ஆபிரிக்கன் நாடுகள் அமெரிக்கா என்று சொன்னவுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைமை உள்ளது. இப்படியான நிலைமையில் ஆபிரிக்கன் யூனியனை சேர்ந்த பல நாடுகளுக்கும் எம்மக்களின் நிலை தொடர்பில் தொடர்ச்சியாக விளக்கி கூறி அந்த நாடுகளுடன் ஜெனீவாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்    தடுத்திருந்தனர். 

வல்லரசுகளின் நலன்களுக்காக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பலிக்கடாவாக்கப்படும் நிலைமை தொடர்பிலும் பல்வேறு தகவல்களை காணொளியில் பகிர்ந்துள்ளார். 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.