இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு–ஓட்டாவாமே, 2018


 தமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனவழிப்பும்
நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்



தீர்மானங்கள்

2018 ஆம் ஆண்டு வைகாசி 5-7 வரையான திகதிகளில் கனடாவின் தலைநகரான ஒட்டாவா நகரில் நடந்தேறிய இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டின் முடிவில், ஈழத் தமிழர்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசமான இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கில் அவர்களது தேசியப் பிரச்சனைக்கான நிலையான அரசியல் தீர்வொன்றினை எட்டுவதற்கு இம்மாநாட்டின் ஏற்பாட்டுக்கு குழு விளைகிறது. சர்வதேசத்திற்கே ஆபத்தான மாதிரியாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவழிப்பு கையாளப்பட்டு வருகின்ற நிலையில் இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் மாநாட்டின் ஏற்பாட்டுக்கு குழு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக சாசனமானது ஒரு மக்கள் கூட்டத்தின் சுயநிர்ணயத்திற்கான உரிமையை பேணிக் காக்கும் நிலையிலும், ஐக்கியநாடுகள் சபையின்  பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின்(ICESCR)உறுப்புரை-1 “எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு, இந்த உரிமையைப் பயன்படுத்தி அவர்கள் சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்”எனப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும்;

மிகத் தொன்மையான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளின் காலத்திலிருந்தே இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் ஒருதனித் தேசமாகவும், தமக்கானவரலாற்று, புவியியல் ரீதியான வரையறுக்கப்பட்ட தாயகப் பிரதேசத்தையும், தனித்துவமானமொழி, கலாச்சாரம் மற்றும் கூட்டுவுணர்வைக் கொண்டிருப்பவர்கள் என்ற நிலையிலும்;, ஈழத் தமிழர்கள் தமது இறையாண்மையை போர்த்துக்கேய மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்த, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு படையெடுப்புகளோடு இழந்திருக்க, 1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமது உரிமைகளை பேண ஈழத் தமிழர்கள் 30 வருடங்களாக சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருக்க, 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியரசு யாப்பு வரைபில் ஈழத் தமிழர்கள் பங்குதாரர்கள் ஆவது மறுக்கப்பட, ஈழத் தமிழ் தேசம் 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியிருக்க இத்தீர்மானத்தின் ஆணையை 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் உறுதிப்படுத்திய நிலையில்;

ஈழத் தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்பட, அரச வன்முறை காரணமாக 30 வருட ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட, ஈழத் தமிழ் தேசத்தின் அழிவை நோக்கமாகக் கொண்டு 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் கொலைகளோடு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட, அதனைத் தொடர்ந்து இலங்கை அரசு போர் ஓய்ந்து சாதாரண நிலை நிலவுவதாக தெரிவித்து வரும் நிலையிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தெளிவான, தீவிரமான, துரிதப்படுத்தப்பட்ட இனவழிப்பை நோக்கமாகக் கொண்டு இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்த வண்ணம் இருக்கவும்,

ஈழத்தமிழர் தாயகப் பிரதேசத்தில் கள நிலவரங்களை கருத்திலெடுக்கையில்; ஈழத் தேசத்தின் அடையாளங்களையும், தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் அதன் தொடர்ச்சியான நிலவுகையையும் சிதைக்கும் முகமாக ஆழ்ந்த, செறிந்த இராணுவமயமாக்கம், துரிதமான அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படல், ஈழத் தமிழ் தேசத்தின் கட்டுமானச் சிதைவு ஆகியன முன்னெடுக்கப்படும் நிலையில்;

சர்வதேச சமூகம் இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் நீதிப் பொறிமுறை ஒன்றினை கோரியிருந்த நிலையில் (குறிப்பாக கனடாவின் மூன்று பிரதான கட்சிகளும் இனவழிப்பை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையொன்றினை கோரியிருந்த நிலையில்) இலங்கையின் வடமாகாண சபை மற்றும் 72 மில்லியன் தமிழர்கள் வாழும் இந்திய தமிழ்நாட்டின் சட்டமன்றம் ஆகியன தமிழர் தேசத்தின் மீதான இனவழிப்பை விசாரணை செய்ய சர்வதேச விசாரணைகளை கோரியிருந்த நிலையிலும்,

ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான அநீதிகளை ஆராய்வதாக கூறி நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு(LLRC)போன்றனவோ, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதாக கூறி, முன்னெடுத்து வருவதாக கூறும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற இலங்கை அரசு முன்னெடுக்கும்; எந்தவொரு உள்ளகப் பொறிமுறையும் அடிப்படையிலேயே குறைபாடுடையவை மாத்திரமன்றி, இவை எதுவித அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்யாத நிலையில்;

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய  இலங்கை அரசின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை (UNHRC)பிரேரணை  A/HRC/34/L.1ஐ நிறைவேற்றியிருக்க, இப்பிரேரணையை நிறைவேற்ற இலங்கை அரசு எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இப்பிரேரணையினை செயல்படுத்துகையில் எதுவித முன்னேற்றமும் காணப்படாத நிலையிலும்,

ஈழத் தமிழர்களின் தேசிய பிரச்சினையினைத் தீர்ப்பதற்கும், அவர்களின் உரிமைகளினை பாதுகாப்பதற்குமான சகல வாய்ப்புக்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கை அரசின் கபடம் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,

தீர்மானம் 1: இனப்படுகொலை குற்றத்தினை விசாரணை செய்யவதற்கு சுயாதீனமான, சர்வதேச விசாரணையே ஏற்றுக் கொள்ளக்கூடியது.

தீர்மானம் 2:மேலும்,  ஐ. நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அதனது 37 ஆவது அவை அமர்வில் தெரிவித்தது போன்று சர்வதேச சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட பொருளாதார, இராசதந்திர மற்றும் பயணத் தடைகள்;; போன்ற மாற்று மூலோபாயங்கள், அணுகு முறைகளை கையாளவும் வேண்டுகிறது.

தீர்மானம் 3: இலங்கையின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு எதுவித தீர்வும் எட்டப்பட முடியாது என்றும், இதனடிப்படையில் கனடா உட்பட்ட சர்வதேச சமூகம் இலங்கையில் தலையிட்டு சர்வதேச சட்டத்தினை அமுல்படுத்தும்படியும், தமிழர் தேசத்தினையும் அத்தேசத்தின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றது.

தீர்மானம் 4: இலங்கைத் தீவில் வாழும் முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகள் பற்றி கருத்துத் தெரிவிப்பது தமிழ் தேசத்தினதும் அதனது அரசியல் தலைமையினதும் நோக்கெல்லைக்குள் அடங்கா விடினும், ஈழத்தமிழ் தேசத்திற்கான நியாயமான தீர்வானது ஈழத் தமிழ் தாயகப் பரப்பில்  முஸ்லீம் மக்களுக்கான நீதியான, நேர்மையான தீர்வொன்றினை உள்ளடக்கியதாகவே அமையும்.

தீர்மானம் 5: மேலும் வரலாற்று இறையாண்மை, ஈட்டிய இறையாண்மை, பரிகார இறையாண்மை ஆகிய தத்துவங்களின் பொருந்துகையின் அடிப்படையிலும்; ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின்  (ICESCR)உறுப்புரை 1 இன் அடிப்படையிலும்; ஈழத்தமிழ் தேசத்திற்கான நீதியான தீர்வொன்றினை எட்ட வரலாற்று ரீதியாக இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் வரலாற்று தாயகப் பிரதேசத்திலும், புலம்பெயர் தமிழ் தேசத்திலும் கண்காணிக்கப்பட்ட சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதற்கான சர்வதேச தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தீர்மானம் 6: மேலும் இம்மாநாடு இனவழிப்பினால் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசத்தினை கட்டியெழுப்ப கனடாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் ஆதரவு கோரிநிற்பதோடு;, வெளிப்படையான கட்டமைப்புகளை நிறுவுவதற்கான நிதி மற்றும் உதவிகளையும்;  சர்வதேச நிவாரண பணிகளை நிர்வகிக்கும் படியும்;, போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் (முக்கியமாக விதவைப் பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், காயமுற்றோர்) கௌரவமாக வாழ்வதற்கு அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான மற்றும் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான பொறிமுறைகளை நிறுவ அவசர நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி நிற்குமாறும்; கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், பௌதிககட்டமைப்புக்களை கட்டியெழுப்புதல், ஆகியவற்றுக்கான நீண்ட கால நிதி மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்குமாறும் கோரி நிற்கின்றது.

இவ் ஆவணம் இதுவரையில் கீழ் வரும் அமைப்புக்களால் ஒப்புதலளிக்கப்பட்ட ஆவணமாக முன்வைக்கப்படுகிறது:

Australian Tamil Congress (ATC)
Brampton Tamil Association (BTA)
British Tamil Forum (BTF)
International Council of  Eelam Tamils (ICET)
Ilankai Tamil Sangam (ITS)
Mississauga Tamil Association (MTA)
National Council of Canadian Tamils (NCCT)
Ottawa Tamil Association (OTA)
People for Equality and Relief in Lanka (PEARL)
Quebec Tamil Development Association (QTDA)
Tamil Canadian Civil Society Forum (TCCSF)
Transnational Government of Tamil Eelam (TGTE)

United States Tamil Political Action Council (USTPAC)



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.