போராட நினைவேந்தல் - நினைவேந்தல் போராட





நினைவேந்தல்கள் இயல்பானவை:

அகிலத்தில் வாழும் உயிரிகள் அவற்றுடன் வாழ்ந்த உயிரிகளை எண்ணுவதும்அவற்றுடன் வாழ்ந்த நினைவுகளை மீட்டுப்பார்ப்பதும் இயல்பாக வரலாற்றில் இடம்பெற்று வருகின்ற ஒன்று. அது வெளிப்படுத்தும் மொழி மனிதருக்கு மனிதர் விளங்கிக் கொள்ளப்படுகின்றது. விலங்குகள், பறவைகள் கூட இந்த நினைவேந்தல்களை அவற்றுக்கேயுரிய முறையில் செய்கின்றன’ என்பது அனுபவம் வாய்ந்த விவசாயி ஒருவரின் கருத்து.

இறந்தவர்களது நினைவுகளை மட்டுமல்ல அவர்களது உடல்களையும் பாதுகாப்பதில் மனித நாகரீகங்கள் ஈடுபாடு காட்டியிருந்தன என்பது வரலாறு. எகிப்திய நாகரீகத்தில் இறந்தவரின் உடலை பாதுகாப்பாக வைத்திருப்பதும்இந்து நாகரீகத்தில் இறந்தவரை தகனம் செய்த பின் கங்கையில் சாம்பலை கரைப்பதன் மூலம் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிறு என்பதும் வலியுறுத்தப்பட்டது. இறந்தவர் உயிர்ப்பை வலியுறுத்தி கிறிஸ்வர்கள் புதைப்பது மரபு.

இறந்தவரை நினைப்பது இயல்பானது. இறந்தவரை அடக்கம் செய்த இடத்தை மதிப்பது நாகரீகமானது. நினைவுத்தூபிகளை அமைத்து நினைவேந்தலில் ஈடுபடுவது சமூகக்கூட்டு ஆரோக்கியமாதலுடன் தொடர்புபட்டது. சுனாமியில் இறந்தோர் அனைவரதும் உடல்கள் அவர்களுடைய உறவுகளுக்கு கிடைக்காத போதும்அவர்களது பெயர்கள் முல்லைத்தீவில் எழுதப்பட்டுள்ளன. அவை நினைவுகூரப்படுகின்றன. போரிலே இறந்த குரு அருட்பணி சறத்ஜீவன் அவர்களுக்கும் கொல்லப்பட்ட எல்லா மக்களுக்குமாக இரு நினைவுத்தூபிகள் உருத்திரபுரத்தில் கட்டப்பட்டுள்ளன. அங்கும் அவர்கள் நினைவு கூரப்படுகின்றனர்.

நினைவேந்தல்களுக்கு தடைகள்:

உலகின் பல இடங்களிலும் நினைவேந்தல்கள் நடந்துவருகின்றன. இவை வரலாற்றை மீட்டுப்பார்க்கவும் வரலாற்றை மறந்துவிடாமல் உண்மையுடனும் மனச்சாட்சியுடனும் வாழவும் உதவுகின்றன. ஆனால் இலங்கையில் வடக்கு கிழக்கில் நினைவேந்தலுக்கும் தடைகள்கட்டுப்பாடுகள் பல்வேறு மட்டங்களிலும் காணப்படுகின்றன.

கோப்பாய் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வீரச்சாவை தழுவியவர்களின் துயிலும் இல்லம் இராணுவமுகாமாக உள்ளது. அங்கு புதைக்கப்பட்டவர்களின் உறவுகள் நினைவேந்தல் செய்ய இடமேயில்லை. இது மனித உரிமை மீறல் என்பது மனிதத்தின் போக்கில் இருப்பினும் இராணுவமயமாக்கலின் போக்கில் இவற்றுக்கு இடமேயில்லை.



பிரித்து ஆளலும்’ சுயநலவாதமும்:

2018 மே 18 இல் கொல்லப்பட்டவர்களை முள்ளிவாய்க்காலில் இயல்பாக நினைவுகூர எத்தனை எத்தனை சிக்கல்கள்? எத்தனை எத்தனை பிரச்சினைகள்பிரித்தானியரின் காலனித்துவம் இன்றும் பிரிவினைகளுடன் துன்புறுச் செய்கின்றது என்பதற்கு அப்பால், நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் இரத்தத்தையும் கண்ணீரையும் கூட்டு இழப்பையும் பெறுமதியாகப்பார்க்கஎம்மால் ஏன் முடியாதுள்ளது

சுயநலம் எல்லா மட்டங்களிலும் அதிகரித்து வருகின்றது. கட்சிசாதிசமயம்,.. என எல்லா தளங்களிலும் நான்’ வாழ எப்படி அனைத்தையும் பாவிக்கலாம் என்பதே நோக்காகவுள்ளது. சொந்தப்பணத்தில்மரத்தடியில் தேநீர் குடித்துவிட்டுஇணைந்து வாழ என்ன செய்ய வேண்டும் என கலந்துரையாடிய விடுதலைக்காலங்கள் மறைந்துஇரவற்பணத்தில்குளிரூட்டப்பட்ட  இடத்தில் எப்படி அடுத்தவரை பிரிக்கலாம் என்பதை திட்டமிடுவதும் அதனை நடைமுறைப்படுத்த வேலை செய்வதும் கட்டமைப்பாகி வருகின்றது. தனியாட்களாக மட்டுமல்ல அணிகளாகவும் கட்டமைப்புகளாகவும் ஒடுக்குமுறையை பேண்தகுநிலையில் நடைமுறைப்படுத்த அனைவரும் பங்காற்றுவது நடைபெறுவதால் பாதிக்கப்பட்வர்களின் எதிர்காலம் மட்டுமல்லஇறந்தவர்களின் நிகழ்காலம் கூட விளங்க முடியாத அளவுக்கு போதையூட்டப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக போதை தவறு என ஒன்றாக கூற முடியாமல் ஒருவர் மற்றவருடைய போதையை தவறு என கூற அதிகமாக வலுவை பிரயோகிக்க வேண்டி வந்துவிட்டது.

அனைவரும் ஒரேமாதிரி இருக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக இயங்கலாம் என்னும் ஜனநாயகத்தை கதைப்பதில் தவறில்லை. இந்த ஜனநாயகம்  இறந்தோரை இணைந்துசுயநலங்களை கடந்துஇயல்பாக நினைவுகூர விடவில்லை என்பதை எப்படி நியாயப்படுத்தலாம்?

பாதிப்புகளுக்குள்ளாகி பலியாகிவரும் தமிழினம் பாதிப்புகள் என்றோ நடந்தவை என கூறி மௌனம் காக்க முடியாது. இனஅழிப்புக்குள்ளாகிவரும் தமிழினம் முள்ளிவாய்க்காலில் நடந்த இனஅழிப்பின் உச்சக்கட்டம் ஒன்றை உரத்துக்கூற தயங்கி நிற்பதை நியாயப்படுத்த முடியாது. அரசியல் சமூக பொருளாதார சமய கல்வி பண்பாட்டுதளங்கள் ஒவ்வொன்றிலும் நடைபெறும் ஒடுக்குமுறையை இயல்பாக பார்க்கும் பக்குவம் இருந்தால் மட்டுமே அழிவை கடந்து ஆக்கம் நோக்கி பயணிக்க முடியும்.

நினைவேந்தலும் நிலைமாறுகால பொதியும்:

நினைவேந்தலும் ஒரு இழப்பீடு’ எனக்கூறி நிலைமாறுகாலநீதிப்பொதி மூலம் எல்லாம் சரிவரும்’ எனும் மாயை உருவாக்கல் பலராலும் முன்னெடுக்கப்படுகின்றது. அமெரிக்காஇந்தியாசீனா போன்ற வல்லரசுகளை எதிர்க்குமளவுக்கு இயலுமை இல்லாவிட்டாலும்இவர்களுக்கு மாலை போடாத அளவுக்கு இயலாமையையாவது பேண வேண்டும்.

 இனஅழிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களின் நோக்கில் நினைவேந்தல் உண்மையையும் நீதியையும் நோக்கி போராட ஒன்று படுவதற்கான ஒரு சந்தர்ப்பம். மீள்நிகழாமையை உறுதி செய்ய சர்வதேசத்துக்கு போலிகளை தோலுரித்துக்காட்ட ஒன்று படுவதற்கான சந்தர்ப்பம்.


நினைவேந்தலை செய்யும் தார்மீக உரிமையும் விடுதலைத் தீயும்:

விடுதலைத் தீ’ அணைய வேண்டும் என விரும்புவோர் மத்தியில்அவர்களின் நிகழ்ச்சி நிரலை செய்துமுடிக்க விரும்புவோரால்விடுதலைத் தீ’ க்காக வரலாறானோரை நினைவுகூர எப்படி முடியும்இதனால் விடுதலைத் தீ’ யுடன் போராடும் ஒரு குழுவுக்கே நினைவேந்தலை செய்ய தார்மீக உரிமையுள்ளது. இதில் போரினால் பாதிக்கப்பட்டு இன்னும் இழப்புகளுடன் போராடுவோருக்கு இடமுண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நினைவேந்தலும் மன்னிப்போம் - மறப்போம்’ கருத்தாதிக்கமும்:

மன்னிப்போம் - மறப்போம்’ என்பதை வலியுறுத்திவரலாற்றில் நடைபெற்ற விடுதலைப்போராட்டம் ஒரு தவறு’ என தமிழினத்தைக் கொண்டு கூறச் செய்வதற்கு முயற்சிகள் நடக்கின்றன.இலங்கையில் எல்லாரும் ஒன்றாக வாழ்வது அவசியம்’ என கூறி மூளைச்சலவை செய்ய பல குழுக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவுகளை முதலீடாக்கி எப்படி தமக்கு இலாபம் சேர்க்கலாம் என நினைத்து செயற்படுவோரை அடையாளங்கண்டு அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்காத அமைப்பை(களை) இன்று மட்டுமல்ல நாளைக்கும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விடுதலைப்போராட்டம் தந்திருக்கும் அடைவை அளவீடு செய்ய முடியாதவர்களாக ஆகாமலிருக்க விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு அதனை தொடர பங்களிப்புச் செய்ய வேண்டும். தவறான கருத்தியல்களை கைவிட்டு மனித விழுமியங்களை மையப்படுத்தி போராட வேண்டும். இது எல்லா தளங்களிலும்எல்லா மட்டங்களிலும் நடைபெற வேண்டும்.

ஒடுக்குமுறையை கட்டவிழ்த்தவர்கள் மனம்மாறி தமது தவறுக்காக மன்னிப்பு கோரினால் பாதிக்கப்பட்டோர் மனமுவந்து மன்னிக்கலாம். அது அவர்களின் உரிமை. மறப்பது சில சந்தர்ப்பவாதிகளுக்கு பொருத்தமாக இருக்கலாம். அழிவு தந்த நினைவகள் அகற்றப்படுமளவுக்கு அன்றாட வாழ்வு மனிதத்துடன் வரும்போது இயல்பாக அனைவரும் வாழலாம்.

அருட்பணி S.D.P செல்வன்
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.