தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்றைக் கட்டமைப்பதற்கான தேவைகளும் வாய்ப்புகளும் உண்டா?

 

மன்னார் மாவட்ட மறை முதல்வர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையை கட்டமைப்பதற்கான  முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையும் ஒரு பிரமுகர் அமைப்பாக மட்டும் இருக்கும் நிலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்றைக் கட்டமைப்பதற்கான தேவைகளும் வாய்ப்புகளும் உண்டா?   என அரசியல் ஆய்வாளர் நிலாந்தனிடம் கேட்ட போது,  

ஒவ்வொருவரும் தமது துறைக்குரிய தொழிலை தொண்டாகவும் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியர், மருத்துவர் தங்கள் துறைசார் பங்களிப்பை தொண்டாகவும் செய்ய வேண்டும். தொண்டாக செய்யும் போது அவருக்கு அங்கே அங்கீகாரம்  கிடைக்கும். அவர் அந்த மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறுவார். அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆசிரியர், மருத்துவர் கதைக்கும் அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.  

மக்களை நாங்கள் கிராமங்கள் தோறும் சந்தித்து, அங்கிருக்கும் பிரச்சினைகளை கண்டுபிடித்து ஆங்காங்கே கிராம மட்டங்களிலேயே குழுக்களை உருவாக்கி   அதன் மூலம் செயற்பாட்டாளர்களை உருவாக்கி அந்த மக்களின் பிரச்சினைகளுடன் நாங்கள் எப்போதும் நிற்க வேண்டும்.  அது காலப்போக்கில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று உள்ளூர் தலைவர்களை வளர்க்கும். 

ஒரு மக்கள் இயக்கத்துக்கான தேவை உள்ளது. அதனை எங்கே இருந்து தொடங்குவது? எங்களுக்கு தேவை செயற்பாட்டரசியல்.  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.