தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் (Video)

சிறிய தேசிய இனங்களுக்கு எதிரான 20 ஆவது திருத்த சட்டத்துக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இவ்விவகாரம் பல வாதப்பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இலங்கைத்தீவில் முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.  

முஸ்லிம்கள் இலங்கைத்தீவில் இரண்டாவது சிறுபான்மை. அவர்கள் இரண்டு சமூகங்களுக்குள்ளும் கரைந்து வாழ்கின்றார்கள். எதிர்ப்பைக் காட்டுவதில் அவர்களுக்கு எப்போதும் வரையறை உண்டு. அவர்களின் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு பாரம்பரியம் என்பதனையே இல்லாமல் செய்து விட்டார்கள்.  அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்றல் அல்லது தர்மத்தின் பக்கம் நிற்றல் என்பதற்கும் அப்பால் தப்பிப் பிழைத்தல் என்ற ஒரு நிலை வந்துவிட்டது.  குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னரான நிலைமை அப்படித்தான் இருக்கிறது.  

இத்தனைக்கும் நீதி அமைச்சராக இருப்பவர் ஒரு முஸ்லிம். முஸ்லிம்களுக்கு எதிரான நீதி நடைமுறையிலிருக்கும் ஒரு நாட்டில் ஒரு முஸ்லிமை நீதியமைச்சராக வைத்திருக்கும் அந்த முரண். முஸ்லிம் ஒருவரை நீதி அமைச்சராக வைத்திருப்பதன் மூலமே அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யலாம் என நம்புகின்றார்கள். இந்தநிலையில் நாங்கள் முஸ்லிம் சமூகத்தை முழுக்க முழுக்க தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் என்று தான் பார்க்க வேண்டும். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.