சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
தன்னாட்சி உரிமை அல்ல சுயநிர்ணயம் (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது.
வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவுசெய்து கொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள சுதந்திரமே தன்னாட்சி உரிமை ஆகும்.
எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. இந்ந உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.
1) ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது.
2) ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செல்வதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது.
3) சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. சுய நிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற பொருளில் அன்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்வது தவறானதாகும். பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினையும் ஒன்றல்ல.
4) பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போது தான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
5)இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும்.
நிமிர்வு வைகாசி 2017 இதழ்
Post a Comment