நிமிர்வுகள்





அப்புக்காத்தரும் அன்னம்மாக்காவும்…

அப்புக்காத்தர்:     “அப்பனே ஆண்டவா.. எல்லாரும் நல்லா இருக்கவேணும்..” கும்பிட்டுக் கொண்டு திரும்பிறன்.. சொல்லி வைச்ச போல அன்னம்மாக்கா எதிரில வாறா.. நல்லதாய் போச்சு..

அன்னம்மாக்கா:  “நாசமாய்  போச்சு.. உவன் அலம்பல் அப்புக்காத்தரிட்ட மாட்டப்போறன் போல.. எல்லாத்துக்கும் உடனே ஓமெண்டு சொல்லி வைப்பம்..” எப்படி சுகங்கள்….? ஏதோ அவசரமாய் போறது போல கிடக்கு..

அப்புக்காத்தர்:     அமைச்சரைச் சந்தித்து ஒரு மனு கொடுக்கப் போறன்…

அன்னம்மாக்கா:  என்ன பிரச்சினை..? என்னத்துக்கு…? யாருக்கு..?

அப்புக்காத்தர்:     எங்கட வீட்டுக்குக் கத்தரித்தோட்டம் வர வர நாசமாகிக் கொண்டு போகுது.. அதைக் காப்பாற்றச் சொல்லித்தான்…பல முறை பல அதிகாரிகளிடம் அறிவிச்சும், எல்லாரும் அசமந்தப் போக்கில இருக்கினம்.. இந்த முறை எழுத்தில மனு கொண்டுபோய் அமைச்சரிட்ட கொடுக்கப்போறன்..

அன்னம்மாக்கா:  என்னது..?

அப்புக்காத்தர்:     இதுக்கும் தீர்வில்லை எண்டாப்பிறகு…பெரிய பிரச்சினை வரும்.. தெரியும் தானே..

அன்னம்மாக்கா:  அதுசரி.. யாற்ற தோட்டம்?..

அப்புக்காத்தர்:     எங்கட தான்….

அன்னம்மாக்கா:  சரியாப் போச்சு…என்ன நடந்தது…?

அப்புக்காத்தர்:    திணைக்களத்தால தான் கத்தரி நாற்றுக்கள் தந்தவை… நட்டனான்… இப்ப அது வடிவாய் வளருதில்லை.. எங்களுக்கு மட்டும் ஏதோ செய்து போட்டாங்கள்…

அன்னம்மாக்கா:  அதாலை…?

அப்புக்காத்தர்:    அதாலை தான்.. முறையிடப் போறன்…

அன்னம்மாக்கா:  என்னெண்டு…?

அப்புக்காத்தர்:     வளரேல்ல எண்டு…

அன்னம்மாக்கா:  நீ ஒழுங்காய் தண்ணீர் ஊத்தினனியோ..?

அப்புக்காத்தர்:     இடைக்கிடை ஊத்திறனான்..

அன்னம்மாக்கா:  பசளைகள் போட்டு.. பூச்சிகள் பிடிக்காம பார்க்கிறனியோ..?

அப்புக்காத்தர்:      என்னது… என்னயே கேள்வி கேட்டுக் கொண்டு…

அன்னம்மாக்கா: அப்ப ஆரைக் கேக்கிறது…?

அப்புக்காத்தர்:    ஆர் தந்தினமோ…  அவையத்தானே  கேட்கவேணும்…
----------+------------------+------------------+-------------------------


நெம்பு
நிமிர்வு ஆனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.