நிமிர்வு வேண்டி நிதம்
நிமிர்வு வேண்டி நிதம்
நித்தம் கூச்சல் போடுகிறோம்.
தெருவெளியில் வந்து.
உரிமைகளுக்காய், உயர்வுகளுக்காய்…
யார் யாரோ பறித்ததற்காய்…
பதிந்த கூரைகளின் கீழ் இருப்பதனால்,
தவழ்ந்து வாழ்கிறோம் என்கிறோய் -
நிமிர்ந்து அதன் உயரம் பார்க்காமலேயே…
எமது கைகள் கட்டப்பட்டு விட்டன…
கால்கள் முடக்கப்பட்டுவிட்டன…-
என்று சொல்லிச் சொல்லியே
சோம்பேறிகளாய் ஆகிவிட்டோம்… -
இயலுமான அசைவுகளைக் கூடத்
தோலைத்துவிட்டு…
யார் யாரோடோ மோதுவதாய்
காட்டிக்கொள்கிறோம்…. உள்ளே
தினம் ஒருவர் மற்றொருவருக்காய்
குழி பறித்துக்கொண்டே…
எமது முதுகெலும்பால் - நாமே
நிமிர்வதற்கு,
யார் தயவும் தேவையில்லை….
நாமே நிமிர்வோம்…
நம் குற்றங்கள் களைவோம்…
நம் கரங்களால் கட்டுவோம் -
நமக்கான நல்ல எதிர்காலம் ஒன்றை….
நெம்பு
நிமிர்வு ஆனி 2017 இதழ்
Post a Comment