நிமிர்வுகள் - 2 - விட்டதுறையும்... விடாதகுறையும்…




அப்புக்காத்தரும்   அன்னம்மாக்காவும்…

அப்புக்காத்தர்:  மயிலிட்டி விட்டாச்சாம்…நீங்க போய்ப் பாத்தனிங்களோ..?

அன்னம்மாக்கா:  ஓமோம்;.. அண்டைக்கே போனனான்…

அப்புக்காத்தர்:  அப்ப இனியென்ன, எல்லாம் சரிதானே…?

அன்னம்மாக்கா:  என்ன எல்லாம் சரி…?

அப்புக்காத்தர்:   மயிலிட்டி மீன்பிடித்துறையும் விட்டாச்சு… எல்லாரும் தொழில் செய்து நல்லா இருக்கலாம்…

அன்னம்மாக்கா:  தொழிலோ…அது வேற கதை.. ஆனாப் பாருங்கோ, எங்கட கடற்கரையில கால்களை நனைக்கேக்க… எனக்குக் கடவுளையே, நேர கண்டமாதிரிக்கிடந்தது… கை கூப்பித் தொழுது, கரையில விழுந்து கும்பிட்டனான்.. கண்டியளே..

அப்புக்காத்தர்:  மெய்யாலுமாவோ…?

அன்னம்மாக்கா: உண்மையாய்த் தான்.. ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிசமாய்… கண்ணில இருந்து தண்ணி பைப்பைத் திறந்துவிட்டமாதிரி வழிஞ்சு கொண்டே இருந்தது…

அப்புக்காத்தர்:  இருபத்தியெட்டு வருசத்திற்குப் பிறகெண்டா…சும்மாவே என்ன..? அதுசரி…ஏன் தொழிலுகளுக்குப் போகேலாதோ…?

அன்னம்மாக்கா: துறையை விட்டாச்சுத் தான்… காணிகளையுமெல்லோ முழுசா விட வேணும்… பிறகு சனமெல்லாம் மெல்ல மெல்லத் திரும்பி வந்து குடியேறோணும்.. கட்டாந்தரையில இருந்து, ஒண்டொண்டாய் கட்டியெழுப்பிறதெண்டால்.. சும்மாவே.. காலநேரமும் வேணும்.. தூக்கிவிடக் கைகளும் வேணும் தான்..

அப்புக்காத்தர்:  ஓமோம்;… அதெண்டாச் சரிதான்…நானும் ஒருக்கா வாறகிழமை அப்பிடிப் போய்ப் பாக்கத்தான் வேணும்…

அன்னம்மாக்கா :  கட்டாயம் ஒருக்காப் போய் பார்த்திட்டுவாங்கோ அடுத்த கிழமை சந்திப்பம்
----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு ஆடி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.