நிமிர்வுகள் - 4- நீளும் காத்திருப்புக்கள்.
அப்புக்காத்தரும் அன்னம்மாக்காவும்…
அப்புக்காத்தர்: ஒரு மாதிரி ஜனாதிபதி கையெழுத்துப் போட்டிட்டார்…இனி உந்தச் சனங்களெல்லாம் போராட்டத்தை விட்டுட்டு நிம்மதியாய் இருக்கலாம் தானே என்ன..?
அன்னம்மாக்கா: என்ன கையெழுத்து…? என்ன போராட்டம்..?திடீரென்று நீங்க தொடங்க எனக்கொண்டும் விளங்கேல்ல…
அப்புக்காத்தர்: சரி.. சரி.. விளக்கமாய் சொல்லுறன்.. உந்த காணாமல் போன ஆக்களின்ர உறவுகள் எல்லாரும் கனநாளாய் போராட்டம் செய்யினமெல்லோ…
அன்னம்மாக்கா: ஓம்..ஓம்..தெரியும்.. இருநூறு நாட்களுக்கு மேல தொடர்ந்து செய்து கொண்டிருக்கினம்…
அப்புக்காத்தர்: அதுக்கு ஒரு முடிவு இனி வரப்போகுது…
அன்னம்மாக்கா: அப்படியே… கனக்கப் பெரியாக்கள் எல்லாம் வந்து,வந்து பார்த்திட்டுப் போறவையெல்லோ…
அப்புக்காத்தர்: ஓமோம்.. இரண்டு மூன்று தரம் ஜனாதிபதியையும் சந்திச்சவை..
அன்னம்மாக்கா: சனங்கள் அவரைச் சந்திச்சு என்ன கேட்டவை…
அப்புக்காத்தர்: காணாமல் போன தங்கட உறவுகளைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லித் தான்…வேற என்ன..? கடைசி இருக்கிற ஆக்களின்ர பெயர்ப்பட்டியலயாவது தரச்சொல்லித்தான் அவை கோரிக்கைவிட்டவை…
அன்னம்மாக்கா: அது நியாயமானது தானே…போர் முடிஞ்சு இத்தனை வருஷமாச்சு… தங்கட சொந்தங்கள் உயிரோட இருக்குதோ, இல்லையோ எண்டு மனம் அல்லாடுறது எவ்வளவு கஷ்டம்…
அப்புக்காத்தர்: தங்கட பிள்ளைகளைத் தொலைச்சுப் போட்டு, தாய், தகப்பன்மார் புத்தி பேதலிச்சுப் போய்த் திரியுதுகள்…
அன்னம்மாக்கா: அது சரி.. உறவுகளைக் காணேல்லை காணேல்லை எண்டா என்ன…?
அப்புக்காத்தர்: உது தெரியாதே… இறுதிப் போரில காணாமல் ஆக்கப்பட்டவையள் தான்….
அன்னம்மாக்கா: நல்லாத் தெரியுது எனக்கு… ஆனா முக்கியமான ஆக்கள் தான், விளங்காதது போலத்திரியினம்… ஏதோமெஜிக் செய்து ஆக்கள் காணாமல் போயிட்டினம்… வானத்தில இருந்து மெஜிக்மான் வந்துதான் கண்டுபிடிச்சுக் குடுக்கவேண்டுமென்று எல்லாரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கினம்…
அப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்…ஏதோ உந்த காணாமல் போனோருக்கான அலுவலகத்தைத் திறந்து தன்னும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்தாச் சரி…
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-
Post a Comment