முடிவிலிப் பயணங்கள்
ஆற்றமுடியாது,
துயரத்தில் தவித்தல்…
தவிர்க்க முடியாதது..
ஆறக் கூடாதென்று,
தவிக்க விடுதல்…
தவிர்க்கப் படவேண்டியவையே…
வலிகளும், வேதனைகளும்
அது கொடுக்கும் கண்ணீரும்…
நிற்பாட்டுவதாய் இல்லை யாரும்…
அவர்கள் சிந்தும் கண்ணீரும்,
தொடுக்கும் போராட்டமும்…
தேவைப்படலாம் சிலருக்கு…
மறக்கடிக்கப்படக் கூடாது
மண்ணிற்குள் என்று,
கிண்டிவிடும் போதெல்லாம்
தீயாய்க் கருகுவதென்னவோ
இந்த அப்பாவி மரங்கள்தான்….
“சொன்னாலும் கேடு…சொல்லாவிட்டாலும் கேடு…
அரசிற்கு ஆப்பு வைத்ததாய்
பெருமைn காள்ளும் - எம் நீதி,
இந்த அப்பாவி மனங்களையேன்
தினம் அல்லலுறவைக்க வேண்டும்…
போரிற்குள்ளும்,
மீண்ட பின்பும்,
பாதிப்படைய ஒரே கூட்டம்…
பார்வையாளர்களாயும் ஒரே கூட்டம்…
“நிம்மதியாய் எழுந்து செல்லுங்கள்…
நாங்களும் உம் உறவுகள் தான்..
கூட வருவோம்…தோள் தருவோம்..”
- ஆறுதலாய் சொல்வதற்கு.
யாரும் தயாராய் இல்லை…
ஏனெனில்,
- இது நல்லாட்சியின் கடமையாம்…
நெம்பு
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-
Post a Comment