கனவு வசப்படட்டும்பட்டாம் பூச்சிகளின் உலகத்தை
உங்களின்
கைப்பிடிக்குள் சிறைபிடித்தவர்களே…
சின்னக் கனவுகள்,
சிறகு விரிக்க முன்பு
பறக்கத் தடைபோட்டவர்களே…

சற்றுச் சிந்தியுங்கள்…
நாங்கள் பிரதியெடுக்கும் இயந்திரங்களையா
அல்லது மனிதர்களையா
வளர்த்தெடுக்கின்றோம் என்று…

உங்களுக்குப் பேர் வரவேண்டி,
பெயரளவிலான சமூகத்தையா
கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்…?
கனவும் கற்பனையும் காய்ந்துபோன,
புதிய சிந்தனைகள் தொலைந்துபோன,
வருங்காலத்தையா வரவேற்கின்றோம்…?

முடியுமான அளவிற்கு,
முயற்சிக்க ஊக்குவியுங்கள்…
பாடப் படிப்பிற்கு அப்பாலும்,
கற்றுக்கொள்ளப் பழக்குங்கள்…
தங்களின் கைகளால் அவர்களின்
வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனுமதியுங்கள்…
இரசிக்கும் மனதும்,
இனிக்கும் வாழ்வும்,
என்றென்றும் வசப்படும்…

நெம்பு
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.