நிமிர்வுகள் - 7- மௌனிக்கும் திறமைகள்



அப்புக்காத்தரும்   அன்னம்மாக்காவும்…

அப்புக்காத்தர்: இந்த உலகம் இப்ப வர வரக் கெட்டுப் போச்சுது கண்டியளே…

அன்னம்மாக்கா: ஏன்..? என்ன அப்படி நடந்து போச்சுது…

அப்புக்காத்தர்: இப்ப உண்மையான, திறமையான மனிசர்களைக் காணமுடியாமல் எல்லோ கிடக்குது…

அன்னம்மாக்கா: அதெண்டாச் சரிதான்…!

அப்புக்காத்தர்: அப்படி என்னெண்டு ஒரேயடியாய் நல்ல திறமையான மனிசரெல்லாம் காணாமல் போனவை…உதுவும் அரசாங்கத்தின்ர சதி வேலையோ..?

அன்னம்மாக்கா: நல்ல மனிசரெல்லாம் காணாமல் போகவில்லை… இது எங்களுக்கு நாங்களே செய்து கொள்கிற செய்வினை தான்..

அப்புக்காத்தர்: உண்மையாய்த்தான் சொல்லிறியளோ…அப்ப உண்மை, திறமையெல்லாம் எங்கே போயிட்டுது..?

அன்னம்மாக்கா: அதுகள் ஒரிடமும் ஓடிப்போகேல்லை… தலைகள் இருக்கவேண்டிய இடத்தில வாலுகள் இருந்து வாலாட்டினா என்ன செய்யிறது…

அப்புக்காத்தர்: அதுக்கு…?

அன்னம்மாக்கா: உண்மை, திறமையெல்லாம் வாய் மூடி, கைகட்டி இருக்குதுகள்…வேற என்ன செய்யிறது..?

அப்புக்காத்தர்: ஓமோம்.. முட்டாள்கள் சபையில வாயைத் திறந்து, அறிவாளி கதைச்சா சபைக்கென்ன விளங்கவே போகுது…?

அன்னம்மாக்கா: ஐந்து நோஞ்சானை அடிச்ச ஒரு அரைநோஞ்சான் தான் எங்கட ஊரில பலசாலி…

அப்புக்காத்தர்: ஓமோம்.. பக்கத்தில ஓடுறவனை முந்திட்டமெண்டால் சரி…அவன் போற பாதை நரகமாய் இருந்தாலும் கவலையில்லை…

அன்னம்மாக்கா: ஏதோ.. என்னத்தையோ தொலைச்சுப் போட்டுத் தேடி ஓடிறது மாதிரி… எல்லாத்தையும் அடிச்சு விழுத்தி, ஏறி மிதிச்சுக்கொண்டு திரியுதுகள்…

அப்புக்காத்தர்: ஓடுறதுதான் ஓடுறியள்… சரியான பாதையில ஓடுங்கோவன் எண்டால், கனபேர் போற பாதையில தான் தாங்களும் ஓடுவினமாம்…

அன்னம்மாக்கா: எல்லாரும் போய் படுகுழியில விழவேணுமெண்டால் என்ன செய்யிறது..?

அப்புக்காத்தர்: இதையெல்லாம் எப்ப சரியாய் விளங்கிக் கொள்ளப் போறமோ தெரியேல்லை…

----------+------------------+------------------+------------------------

நெம்பு
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.