நாற்காலிகள் தேவைஅவன் குற்றம்...
இவன் குற்றம்… சொன்னால்
நான் குற்றம் இல்லை,
நம்புங்கள்...!

சிறுகுற்றம் செய்வோருக்கு,
உடனடிச் சிறைத்தீர்ப்பு…
பெருங்குற்ற முதலைகளுக்கு,
குற்றம் இல்லையெனச் சொல்லி
விசாரிக்க குழுக்கள் பல கூடும்…

ஆள்பவனை விடுத்து,
ஆண்டவனே நல்லதென…
முடிவெடுக்க வைக்கும்,
ஆள்பவர்கள் கூத்து…-அனைத்தும்
பார்த்துச் சலித்துப் பேதலிக்கும் மனது…

குற்றங்கள் இல்லை...
சுற்றங்கள் இல்லை...
இணைந்த கைகள் இவை,
இமயங்கள் எட்டும் என்றார்,
ஏறியது என்னவோ - விலைகளும் வரிகளும் தான்
நலன்தரும் நற்செயற் திட்டங்களின்றி,
வெறும் வாய்ச்சொற்கள் - எத்தனை நாள்
வாய்க்கரிசி போடும்…?

நாற்காலிகள் தேவை..-
நாங்கள் நல்லவர்கள்…
கெடுதல் ஒன்றும் செய்யமாட்டோம்…
நல்லவையும் செய்ய அறியோம்..
நம்பி வாருங்கள்…!
நலமாய் வாழுங்கள்…!


நெம்பு
நிமிர்வு மாசி  2018 இதழ்-


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.