நிமிர்வுகள் - 10- பூதக்கண்ணாடி நொட்டைகள்!
அப்புக்காத்தரும்….  அன்னம்மாக்காவும்.;..

அப்புக்காத்தர்:  உவள் கனகத்தின்ர மேள், எப்படித் திரியுறாள் என்று பார்த்தனீங்களே…?

அன்னம்மாக்கா: ஏன்... என்ன நடந்தது…?

அப்புக்காத்தர்:  நாலுபிள்ளையள் பெற்றதாய் மாதிரியே திரியுறாள்…?

அன்னம்மாக்கா: ஏன் அதுக்கு என்ன நாலுபிள்ளையள் பெற்றதாய் எண்டு எழுதி ஒட்டிக்கொண்டே திரியுறது…?

அப்புக்காத்தர்: மனிசனையும் விட்டுப் போட்டு, மினுக்கிக் கொண்டு ஊர்வலம் வாறாள்?

அன்னம்மாக்கா: அவளே விட்டவள்…அவன் மனிசன்காரன்தானே இப்ப எத்தனை வருசமாய் அவளையும் பிள்ளையளையும் விட்டுப்போட்டு வேற ஆரோடயோ போனவன்…

அப்புக்காத்தர்: ஓமோம்... அப்படித்தான்… ஆனா அதுக்கு இப்படியே இவள் திரியுறது…?

அன்னம்மாக்கா: ஏன்...  என்ன பிழை…?

அப்புக்காத்தர்: தன்ர பிள்ளையள் போடுற மாதிரி, கட்டையாய்,  இறுக்கமாய் உடுப்புகளும் போட்டு வெளிக்கிட்டுக் கொண்டு போறதே…

அன்னம்மாக்கா:  அவள், அவளுக்குப் பிடிச்சமாதிரி வெளிக்கிட்டுக் கொண்டு போனா மற்றவைக்கு என்ன வந்தது?

அப்புக்காத்தர்: இந்த சனங்கள் எவ்வளவு கேவலமாய்க் கதைக்குது தெரியுமே… இப்பிடி அடிக்கடி  இவள்  வெளிக்கிட்டுத் திரியிறதையும் வேலைக்குப் போறதையும் பார்த்து…

அன்னம்மாக்கா: நீங்கள் கண்டனீங்களோ… கேட்டனீங்களோ… சனம் சொல்லித்திரியிறதை… சனம் வந்து உங்களிட்டையும் சொன்னதோ..?

அப்புக்காத்தர்: இல்லை... இல்லை...  அப்படியெண்டுஅவளின்ர சொந்தக்காரப் பிள்ளை புவனம் தான் சொன்னவள்…

அன்னம்மாக்கா: அதுவும் பிள்ளையளும் கஞ்சிக்கும் வக்கில்லாமல் சாகக் கிடக்கேக்க எங்க போனது உந்த சொந்தமும் சனமும்..?  இப்ப அவள் வேலைக்குப் போய் தன்ர குடும்பத்தைக் கஷ்டமில்லாமல் பார்க்கேக்க தான், எல்லாரும் நொட்டை சொல்ல வாறியள்...

அப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்.. அவையவை தங்கட ஊத்தையளை மறைச்சுக் கொண்டு, மற்றவையில பூதக்கண்ணாடி வச்சுப் பார்த்துக் கொண்டு திரியினம்...

----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.