வழிகள் திறக்கட்டும்
வேலிகளே சிறைகளாகி,
பயிர்களை வாட்டுகின்றன…
காத்தல் மறந்து,
அழித்தலே தொழிலாயின…
தானே, தன் காலில் - சுயமாய்
ஒருவன் நின்றால்,
- அவன் தன்மானச் சிங்கம்!
ஒருத்தி நின்றால்,
- அவள் அவமானச் சின்னம்!
கட்டிற்குள் நின்றும்,
ஆறாய் பெருகுவாள்…
கட்டளைகள் இட்டும்,
கலங்கரை விளக்காய் நிற்பாள்…
தன் வழி பார்க்கும்
தைரியம் உள்ளவளை,
வீண்பழிசொல்லி,
வீட்டிற்குள் முடக்காதீர்…
கட்டற்ற உலகில்
காற்றாய் பறந்து சென்று,
எல்லோரும் மகிழ்வுடன் வாழட்டும்…
வழிவிடுங்கள்…!
- உங்கள் வசை வாய்களை மூடி.
நெம்பு
நிமிர்வு பங்குனி2018 இதழ்
Post a Comment