நிமிர்வுகள் - 12- பொங்கும் பங்களிப்புகள்!

அப்புக்காத்தரும்….  அன்னம்மாக்காவும்.;..

அப்புக்காத்தர்: வர வர எங்கட ஆக்களெல்லாம் சரியான சுயநலவாதிகளாய் மாறிக்கொண்டு போயினம்…

அன்னம்மாக்கா: ஏன் அப்படிச் சொல்லுறியள்…?

அப்புக்காத்தர்: சமூக அக்கறையெல்லாம் குறைஞ்சு கொண்டே வருகுது…

அன்னம்மாக்கா: ஓ… அப்படியே…

அப்புக்காத்தர்: ஆனால் உவன் பாலன் மாதிரி கொஞ்சப் பெடியள் சரியான அக்கறை கொண்டதுகள்...

அன்னம்மாக்கா:  என்ன… பாலன் மாதிரி ஆக்களோ..?

அப்புக்காத்தர்: ஓமோம்.. . அவங்கள் சமூகத்திற்காக எவ்வளவு பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறாங்கள்...

அன்னம்மாக்கா: என்ன… பங்களிப்போ… சமூகத்திற்கோ…?

அப்புக்காத்தர்: அவங்கள் சமூகத்திற்காக எவ்வளவு பொங்கி வழியுறவங்கள் தெரியுமே…

அன்னம்மாக்கா: எங்கே...  உந்தச் சந்தியில நிண்டோ…?

அப்புக்காத்தர்: இல்லை... இல்லை… பேஸ்புக்கில நிண்டு.

அன்னம்மாக்கா: ஓகோ…!

அப்புக்காத்தர்:  அநியாயங்களுக்கு எதிராய் என்னமாய் குரல் குடுக்கிறவங்கள் தெரியுமே…

அன்னம்மாக்கா:  அப்பிடியே…

அப்புக்காத்தர்: அநியாயத்தைக் கண்டு தங்களை மாதிரி பொங்காதவங்களையும் தட்டிக் கேட்கிற கூட்டம் அவங்கள் தெரியுமே…

அன்னம்மாக்கா: பேஸ்புக்கில பொங்கினா… பசிக்குச் சாப்பிடசோறுகிடைக்குமோ..?

அப்புக்காத்தர்: என்ன இப்படிக் கேட்கிறியள்..?

அன்னம்மாக்கா: கதையைவிடக் காரியம் தானே தேவை…

அப்புக்காத்தர்: ஒரு கையாலே தானே சமூகத்திற்குக் கேடு செய்து கொண்டு, மறு கையாலே சமூக அக்கறைக்காய் பாசாங்காய் பொங்கிறஆக்களும் நிறையப் பேர்தான்….

----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.