நிமிர்வுகள் - 13 - சலிக்கும் வாழ்க்கை!
அப்புக்காத்தரும்…. அன்னம்மாக்காவும்.;..
அப்புக்காத்தர்: இப்ப நிறையச் சனங்களிற்கு வாழ்க்கையில பிடிப்பு இல்லாமல் போய்க்கொண்டிருக்கு…
அன்னம்மாக்கா: ஓமோம்... அதெண்டாச் சரிதான்…
அப்புக்காத்தர்: ஆனா ஏன் அப்படி என்று தான் தெரியேல்லை…
அன்னம்மாக்கா: வர வர எல்லாருக்கும் வாழ்க்கையில பிடிப்பு இல்ல, சலிப்புத்தான் மிச்சம்…
அப்புக்காத்தர்: அப்ப போர்க்காலத்தில எல்லாரும் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு அதைக் காப்பாற்றத்தான் ஓடிக்கொண்டிருந்தவை…
அன்னம்மாக்கா: இப்ப எல்லாரும் உயிரைக் கயித்தில பிடிச்சுக் குடுக்கவெல்லோ திரியுதுகள்…
அப்புக்காத்தர்: ஏன் இப்படிப் போச்சுதுகளோ தெரியேல்லை...
அன்னம்மாக்கா: பொசுக்கெண்ட முதல் கயித்தில தொங்குதுகள், இல்லாட்டி நெருப்பில குதிக்குதுகள்.. .
அப்புக்காத்தர்: தப்பி இருக்கிறதுகளும் ஏனோ தானோ என்று மனஅழுத்தத்திலும் விரக்தியிலுமே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்குதுகள்…
அன்னம்மாக்கா: எல்லாம் இருந்தும் ஒண்டும் இல்லை எண்ட நிலைதான்...
அப்புக்காத்தர்:என்ன அது எனக்கு விளங்கேல்லை…
அன்னம்மாக்கா: முன்னையவிட இப்ப எல்லாரும் வசதி வாய்ப்பாய்த் தானே வாழுறம்…
அப்புக்காத்தர்: ஓமோம்…
அன்னம்மாக்கா: ஆனா… அதுகளைச் சந்தோசமாய் அனுபவிச்சு வாழத்தெரியேல்லை…
அப்புக்காத்தர்: ஓமோம்.. எப்பவும் கிடைக்காதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டு திரியுறம்...
அன்னம்மாக்கா: ஓம்… உதுதான், இருக்கிறதை விட்டிட்டுப் பறக்கிறதைப் பிடிக்கப்போய் பள்ளத்தில விழுகிறதென்பது...
அப்புக்காத்தர்:பிரச்சினைகளை இலகுவாக கையாள சிறுவயதில இருந்தே பழக்கவேணும்...
அன்னம்மாக்கா: நாங்கள் எங்ககையாளப் பழக்கிறம்... பிரச்சினைகளைக் கண்டா விலகி ஓட எல்லோ பாக்கிறம்..
அப்புக்காத்தர்: அந்த ஓட்டத்தின்ர உச்சக் கட்டம் தான், உலகத்தை விட்டே ஓடுறது…
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு யூன் 2018 இதழ்
Post a Comment