அன்பே பிரபஞ்சம்…

அன்பிற்கு இங்கே பஞ்சம்…- பொல்லா
வேதனைகளில் மனம் தஞ்சம்…
தடைகளைத் தாண்ட முயலாத
வாழ்க்கைப் பயணங்கள்
மரணங்களில் சென்று மாழும்…

உறவுகள் உண்டு உறவின்றி…
இரவுகள் நீளும் உறக்கம் இன்றி…
மொழிகள் மௌனிக்கும் கேட்பாரின்றி…
மனங்கள் பேதலிக்கும் மகிழ்ச்சியின்றி…

சலிக்கும் வாழ்வுதனை
சாதனையாக்கும் வழியென்ன..?
வலிக்கும் வாழ்க்கைக்கு
வண்ணம் பூசுவதெப்படி..?

அன்பு தான் வழி…
வலி போக்கும் வழி…

எதனையும் எதிர்பாரா அன்பினை வளர்ப்போம்…
மட்டற்ற அன்பால் மனிதர்களை இணைப்போம்…
ஆணவம் விலக,உறவுகள் சேரும்…
புரிதல்கள் கூடின் பிரிவுகள் மறையும்…

சரியும் பிழையும் அவரவர் நோக்கு…
சரி பிழையாகும்… பிழை சரியாகும்
காலத்தின் போக்கில்
அனைத்தும் சமனாகும் - அன்பினால் பார்க்கின்…

ஆதலால்,
அச்சங்கள் தவிர்ப்போம்…!
அன்பினால் நிறைப்போம் - அவனிதனை
மனங்களின் மாண்பினால்,
மகிழ்ச்சிகள் காண்போம்…!

நெம்பு
நிமிர்வு யூன் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.