நிமிர்வுகள் - 15 - வழிமொழியும் அரட்டைகள்!




அப்புக்காத்தரும்….  அன்னம்மாக்காவும்.;..

அப்புக்காத்தர்: என்ன மாதிரி…சுகமாய் இருக்கிறியளோ…?

அன்னம்மாக்கா: ஆண்டவன் புண்ணியத்தில நல்ல சுகம்… அதுசரி.. எங்கட வீட்டில ஒரு பிரச்சினை எண்டா யார் தீர்க்கவேணும்…?

அப்புக்காத்தர்:  இதென்ன கேள்வி… நாங்கள் தானே தீர்க்க வேணும்…

அன்னம்மாக்கா: இப்பத்தை நாட்டு நடப்புக்களைப் பார்த்தா அப்பிடித் தெரியேல்லையே…

அப்புக்காத்தர்: ஏன் அப்படிச் சொல்லுறியள்…?

அன்னம்மாக்கா: எங்கட வீட்ட ஒரு தலை போறபிரச்சினை
போய்க்கொண்டிருக்கு.. யார் வந்து எங்களைக் காப்பாற்ற வேணும் ?

அப்புக்காத்தர்: எங்கட வீட்டில உள்ள ‘தலைகள’; தான்…எங்களைக் காப்பாற்ற வேணும்..

அன்னம்மாக்கா: அப் பஏன் பக்கத்து வீட்டுப் பகுதித் தலை வந்து எங்களைக் காப்பாற்றேல்லை எண்டு, பத்து வருசம் கழிஞ்சு அந்தாளின்ர செத்த வீட்டில வந்து நிண்டு வசை பாடவேணும்..?

அப்புக்காத்தர்: ஓ…ஓ… அதைச் சொல்லுறியளே…!

அன்னம்மாக்கா: ஒருவரைத் தேவைக்கதிகமாய் ஆராதிக்கவும்
தேவையில்லை… தேவையில்லாமல் விமர்சிக்கவும் தேவையில்லை…

அப்புக்காத்தர்: ஓமோம்… எங்கட தேவை என்ன எண்டே எங்களுக்குத் தெரியேல்லை…

அன்னம்மாக்கா: தேவை மட்டுமே தெரியேல்லை… சொந்தமாய்ச் சிந்தித்து கருத்துச் சொல்லக் கூடத் தெரியேல்லை…

அப்புக்காத்தர்: எங்கட மூளையைக் கழற்றி வைச்சிட்டுத்தானே திரியுறம்…

அன்னம்மாக்கா: ஓமோம்… ஆரேன் சொல்லுறதைக் கேட்டு, அடி நுனி யோசிக்காம அதை ஒட்டியே வழி மொழிஞ்சு அரட்டை அடிக்கப் பழகிட்டம்….

அப்புக்காத்தர்: நாங்கள் நிமிரோணும் எண்டா என்ன செய்யவேணும்…?

அன்னம்மாக்கா: எங்கள நாங்களே குனிஞ்சு பார்த்து. எங்கட குறைகளைக் களையவேணும்… கோஷங்களுக்கும் வேசங்களுக்கும் எடுபடாமல் எங்கட எங்கட வேலைகளைச் செய்து வந்தாக் காணும்…

அப்புக்காத்தர்: நாங்களும் நிமிருவோம்.. நாடும் நிமிரும்...

நெம்பு
நிமிர்வு ஆவணி 2018 இதழ்



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.