நம்மால் நாம் நிமிர்வோம்…


கறுப்பு அல்லது வெள்ளை…
வசைபாடல் அல்லது வழிபடல்…
இரு எல்லைகளில் நின்று,
வாழ்க்கைப் பயணத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்…
உள்ளது உள்ளபடி,
இடைப்பட்ட வர்ணங்களை ரசித்து
வாழ்க்கையை வானவில்லாய்
எப்பொழுது ஆராதிக்கப் போகின்றோம்..?

‘உலகத்திலேயே,
எங்களுக்கு மட்டும்தான்
வலி நிறைந்த வாழ்க்கை…
அதைக் களைவது ஒன்றுதான்
இந்த உலகத்தின் வேலை…’
- பைத்தியக்காரத்தனத்தின் உச்ச சிந்தனைகள்.!
தனிநபர் சிலரின் பிரச்சினை இதுவெனில்
சீக்கிரம் காணலாம் தீர்வு…
சமூகமே சிந்திக்கத் தலைப்படின்,
மீள்வதும் எப்படி…?

கடந்தகாலப் பள்ளங்களைப்
படிக்கற்களாக்கி,
மேலேறி வெல்வதே
மானிடத்தின் மேன்மை…
பள்ளத்திலிருந்து எழும்ப
சொந்த முயற்சியேதும் செய்யாது
மற்றவர்கள் உதவவில்லையெனக்
குறை கூறி என்ன பயன்?

புழைய நியாயங்கள் சரியானவையாகவே இருக்கலாம்…
பொருத்தமான சந்தையின்றி கூவி விற்று என்ன பலன்…?
உண்மையின் வெளிப்பாடுகளாய் உணர்வுகள் அன்று…
பணத்திற்கும் புகழிற்குமான வெறும் வியாபாரக்
கோசங்களாய் இன்று…

வெற்றுக்கூச்சல்கள் விடுத்து, வெளிச்சத்திற்கு வாருங்கள்…
நிமிர்வுடன் செயலாற்றி வெற்றி காண்போம் வாருங்கள்…


நெம்பு
நிமிர்வு ஆவணி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.