நிமிர்வுகள் - 17 தலைவருகுது!அப்புக்காத்தர்: இனி என்ன கொஞ்சக் காலத்துக்கு ஒரே பம்பல் தான்…

அன்னம்மாக்கா: என்ன..? ஏன் அப்பிடிச் சொல்லுறியள் ?

அப்புக்காத்தர்: எத்தினை கூட்டுச் சேர்ந்து, எத்தினை ‘தலை’ வரப்போகுது எண்டு தினமும் வேடிக்கை பார்க்கலாம்…

அன்னம்மாக்கா: ஓ.. ஓழுங்காய் ஒரு தலை வருமோ..?

அப்புக்காத்தர்: தலைமை சரியில்லை எண்டு ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கினம்…

அன்னம்மாக்கா: அப்ப எங்கையிருந்து ஓழுங்காய் ஒண்டு வாறது..?

அப்புக்காத்தர்: வானத்திலை இருந்து தான் வந்து குதிக்கவேணும்...!

அன்னம்மாக்கா: ஏன் இஞ்ச ஒருத்தருமே இல்லையோ…?

அப்புக்காத்தர்: கடவுள் இஞ்ச தலைவர்கள் பிறக்கிறதைத் தடை செய்திட்டார் போல..

அன்னம்மாக்கா: கடவுள் ஒண்டும் தடை செய்யேல்லை… நாங்கள் தான் தடுத்துக் கொண்டே இருக்கிறம்..

அப்புக்காத்தர்: என்ன சொல்லுறியள், விளங்கேல்லை…

அன்னம்மாக்கா: தலைவர்களாய் யாரும் பிறக்கிறேல்லை… உருவாகிறார்கள்.. உருவாக்கப்படுகிறார்கள்..

அப்புக்காத்தர்: ஓமோம்.. அதுவும் சரிதான்...

அன்னம்மாக்கா: ஆனால் நாங்கள் தான் அப்பவில இருந்து இப்பவரை ஒருத்தரையும் வளர விடமாட்டோமே..

அப்புக்காத்தர்: அது தலைப்பாவைத் தக்கவைக்கிற தந்திரங்கள் பாருங்கோ..

அன்னம்மாக்கா: தலைப்பா ஒரு தலையில எவ்வளவு நாள் இருக்கெண்டிறதைவிட, அந்தத் தலைப்பா எவ்வளவு உருப்படியான தலைமைகளை உருவாக்கிச்சு எண்டிறது தான் முக்கியம் கண்டியளே..

நெம்பு
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்
----------+------------------+------------------+-------------------------

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.