நிமிர்வுகள் - 19 ஜனரஞ்சக ஜனநாயகம்
அப்புக்காத்தர்: ஒரு மாதிரி ஜனநாயகம் வென்றிட்டுது பார்த்தியளே..?
அன்னம்மாக்கா: என்ன ஜனநாயகமோ…?
அப்புக்காத்தர்: ஜனநாயகப் பாதுகாவலராய் இருந்து நாட்டைக் காத்தது எங்கட தலைமைகளெல்லோ..!
அன்னம்மாக்கா: அட அப்படியே...
அப்புக்காத்தர்: மீண்டு வந்த தலைமை அமைச்சர் இப்ப என்ன சொல்லிறார் எண்டு தெரியுமே..?
அன்னம்மாக்கா: என்னவாம்…?
அப்புக்காத்தர்: “செய்வதைச் சொல்வேன்: சொன்னதைச் செய்வேன் (வேறொன்றும் தெரியாது)”எண்டெல்லே சொல்லிறார்.
அன்னம்மாக்கா: யார் சொன்னதைச் செய்வாராம்…?
அப்புக்காத்தர்: அவர் சொன்னதைத் தான் …?
அன்னம்மாக்கா: அட… நான் ஆரோ சொன்னதைத் தான் செய்வாராக்கும் எண்டு நினைச்சுப் போட்டன்
அப்புக்காத்தர்: நீங்கள் என்ன ஒண்டும் விளங்காம நிக்கிறியள்..
அன்னம்மாக்கா: அது சரி.. இப்ப கொஞ்ச நாளாய் ஒரு இடத்தில இருந்து மண்ணை வெட்ட வெட்ட எலும்புக்கூடுகளாய் வருகுதாம்;: அந்த இடம் இலங்கை நாட்டுக்குள்ளே வராதோ
அப்புக்காத்தர்: ஏன் அப்படிச் சொல்லுறியள்…?
அன்னம்மாக்கா: ஜனநாயகப் காவலர்கள், 269 எலும்புக்கூடுகள் வரை எடுத்தும் வாய் மூடித்தானே இருக்கினம்… அதுக்கெல்லாம் ஆரும் வழக்குப் போட்டதாயே தெரியேல்லையே…
அப்புக்காத்தர்: ஓமோம்... என்ன..
அன்னம்மாக்கா: பெரும்பான்மைகளின்ர பிரச்சினைக்குத் தான் எங்கட தலைமைகளும் கை கொடுப்பினம் போல…
அப்புக்காத்தர்: ஓமோம்.. கொழும்;பில ஜனநாயகம் இருந்தாச் சரிதானே...
நெம்பு
நிமிர்வு மார்கழி 2018 இதழ்
Post a Comment