ஏன் இந்தப் பயங்கரவாதம்?இலங்கைத்தீவில் மீண்டும் ஒரு மனிதப் பேரவலம் உருவாகியிருக்கிறது. அது சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். இன் உதவியுடன் உள்ளூர் முஸ்லீம் அமைப்புக்களால் நன்கு திட்டமிட்டு நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு மிகப்பெரும் பயங்கரவாதப் போரின் தொடக்கப்புள்ளி என்பதனை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்டதன் பின் பெருமளவு உயிரிழப்புக்கள் குறைவடைந்த நிலையில் தொடர் குண்டுவெடிப்பு இனங்களுக்கிடையே நம்பிக்கைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. தோளில் பையுடன் ஒருவரைக் கண்டாலே குண்டாக இருக்குமோ என சந்தேகப்பட தோன்றுகிறது.


எம்மக்களும், சிறார்களும், வெளிநாட்டவர்களும் இலக்கு வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கை அரசுக்கு இப்படியான தொடர் தாக்குதல்கள் நிகழப் போவதாக சர்வதேச நாடுகளில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கிறது அரசு.

சுருக்கமாக கூறினால் மைத்திரிக்கும் ரணிலுக்கு இடையிலான அகங்காரப் போரில் 290 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

இஸ்லாமிய மதரஸாக்களில் சிறிய வயது முதல் மத அடிப்படைவாத குரோத உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. இதற்கு சவூதி போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள பெரும் செல்வந்தர்கள் பண உதவி புரிந்து வருவது தெரிந்ததே. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்படுவது முதன்மையானது. எந்த மதமானாலும் மத அடிப்படைவாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் பலர் இறந்ததால் முக்கியமான பல நாடுகள் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. இதனால் இலங்கையில் சுற்றுலாத்துறையை நம்பியுள்ள பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   குண்டுவெடிப்புக்களை அடுத்து இலங்கையின் பொருளாதாரம் அடியோடு வீழத்தப்பட்டு விட்டது.


ஆசிய நாடுகளதும், உலகினதும்  பொருளாதார இராணுவ பலத்தில் முடிசூடா மன்னனாக வலம்வர நினைக்கும் சீனா இன்று கடல்வழியாக முத்துமாலை திட்டத்தினை (String of Pearls) முன்னெடுத்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இலங்கையில் அமெரிக்காவை மிரட்ட சீனாவின் முதல் தாக்குதல் ஒத்திகை தான் இது என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மனிதனை அன்பால் ஒன்றிணைத்து நெறிப்படுத்தவே மதங்கள் தோன்றின. உயிர்களை பலியெடுக்க அல்ல என்பதனை அனைவரும் உணர வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

நிமிர்வு சித்திரை 2019 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.