நிமிர்வுகள் - 24 சோதனைக்காலம்



அப்புக்காத்தர்: உயிர்ப்பயமில்லாமல் இப்ப கொஞ்சம் ஆசுவாசமாய் உலவிக் கொண்டிருக்கிறம் எண்டுபார்த்தால், இப்ப புதுத்தலையிடி ஒன்று வந்திருக்கு…

அன்னம்மாக்கா: ஓமோம்… இப்ப எல்லாத்துக்கும் பயப்பிட வேண்டியெல்லே கிடக்குது…

அப்புக்காத்தர்: அதைப் பார்த்தால் பயம், இதைப் பார்த்தால் பயம், அவனைப் பார்த்தால் பயம், இவளைப் பார்த்தால் பயம் எண்டு தெனாலி கமல் போல அலைய விட்டிட்டாங்கள் எங்களை…

அன்னம்மாக்கா: அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே

அப்புக்காத்தர்: நல்லா இருந்த நாட்டுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களே…

அன்னம்மாக்கா: எலியை வளையில வளைச்சுப் பிடிக்காமல் றோட்டில வந்தெல்லே தேடிக்கொண்டிருக்கினம்...

அப்புக்காத்தர்: வளைக்கே கை வைக்கேலாது பாருங்கோ… பெரிய கைகள் சிலது காவலுக்கு நிற்குதாம்…

அன்னம்மாக்கா: அப்ப வலி எங்கேயோ இருக்க, மருந்தை எங்கேயோ தடவிக்கொண்டிருக்க வேண்டியது தான்..

அப்புக்காத்தர்: ஒரே பஸ்சை ஒன்பது தரம் பாக்கிறாங்கள்…அடிக்கடி நடக்கச்சொல்லி உடற்பயிற்சியும் தாறாங்கள்…

அன்னம்மாக்கா: வடக்கில மட்டும்தானாம் இப்படி வடிவான சோதனைகள்…

அப்புக்காத்தர்: ஓ… அதுவும் அப்பிடியே…

அன்னம்மாக்கா: கட்டி வளர வளரப் பெருமையாய்ப் பாத்துக் கொண்டு நிண்டு போட்டு, இப்ப வெடிச்சுச் சீழ் வடியத்;தான் எல்லாரும் ஆலாய்ப்பறக்கினம்..

அப்புக்காத்தர்: அதை இதை வேணுமெண்டு கேட்டால் குடுக்கலாம்… உயிர்கள் தான் வேண்டுமெண்டு நிக்கிறவையோட என்ன செய்யிறது ..?

அப்புக்காத்தர்: என்னவோ இனிப்பிரச்சினை வராமல் ஆரம்பத்திலேயே பார்த்திட்டாச் சரி

நெம்பு
நிமிர்வு வைகாசி 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.