யாழ்ப்பாணத்தில் ஓர் முன்மாதிரியான இயற்கை வழி ஒருங்கிணைந்த பண்ணை (Video)


உலகெங்கும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நேரத்தில் தான் தற்சார்பு பொருளாதாரம் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் முற்றிலும் இயற்கை வழியில் அமைந்த ஒருங்கிணைந்த பண்ணையினை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறார் மாவை நித்தியானந்தன். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை சேர்ந்த இவர் ஆரம்ப காலங்களில் இலக்கிய செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.

அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாகவும் தமிழ் பொறியியலாளராகவும், அங்கு தமிழ் மொழியினை கற்பிக்கும் பாரதி பள்ளிக்கூடத்தினையும் நடாத்தி வருகின்றார். இவரது பண்ணை இன்று இயற்கை வழி விவசாயத்தை கற்க விரும்பும் மாணவர்களுக்கான பயிற்சிப் பண்ணையாகவும், இயற்கை வழி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் முன்மாதிரிப் பண்ணையாகவும் செயற்பட்டு வருகின்றது.
அவரது பண்ணைக்கு நாங்கள் சென்ற போது அங்கு விளைந்த நான்கு மரக்கறிகளோடு மதியம் பரிமாறப்படும் பண்ணைச் சாப்பாட்டின் சுவையில் இயற்கையான மரக்கறிகளின் தனிச் சுவையை அறியலாம். மேலதிகமாக பல விடயங்கள் காணொளியில்,

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.