க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு


மாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா பேரிடர் காலம் என்பது மிகவும் சவாலானது. தங்களது கல்வியை இடைவிடாமல் கொண்டு செல்வது என்பது தான் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.  அதிலும் தங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகள் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது.  இந்நிலையில் முக்கியமாக அந்த மாணவர்களுக்காகவாவது இணையவழி ஊடான கல்வியை வினைதிறனுடன் வழங்க வேண்டியது அவசியமாகும்.  கொரோனா பேரிடர் காலம் என்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரப் போகிறதோ என்பது தெரியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மீள ஆரம்பிப்பது இன்னும் சில மாதங்கள் தாமதமடைய வாய்ப்புள்ளது.  ஆனால், மாணவர்களுக்கான உயர்தரப் பரீட்சைகள் உரிய திகதியில் நடாத்தப்படும் என கல்வியமைச்சு அறிவித்து விட்டது.   
ஆகவே இக்காலப்பகுதியில் எமது மாணவர்களின் கல்வியை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். 
ஆனாலும் இந்த அனர்த்த காலத்தை சரியாக விளங்கிக் கொண்ட ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இணையமூடான கற்றலை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். 

அதில் வடமாகாண விஞ்ஞான சங்கத்தின் வளவாளரும், கல்விச் சேவை நிலையம் - தென்மராட்சியின் இயக்குனருமான கே.எஸ் கௌதமன் அவர்கள் கல்விப்பொதுத் தராதர மாணவர்களுக்கு இணையமூடாக பௌதீகவியல் பாடத்தை கற்பிக்க முன்வந்துள்ளார்.  ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக பரீட்சார்த்த முறையில்   இணையமூடான கற்பித்தலை மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், போதிய தொழிநுட்ப வளங்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு இணையமூடாக கல்வி கற்பிப்பதில் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.  கௌதமனை போல் வேறும் சில ஆசிரியர்கள் தங்களால் இணையவழியில் கல்வி கற்பிக்கக் கூடிய தகுதி இருந்தும் போதிய தொழிநுட்ப வளங்கள் இல்லாமையினால்  தான் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  இவரது KS Gowthaman (https://www.facebook.com/ks.gowthaman.1) என்கிற முகநூலூடாக பௌதீகவியல் பாடத்தை காணொளி மூலம் கற்பித்து வருகிறார். கற்பிக்கும் குறித்த பாடத்துக்குரிய சந்தேகங்களை யாழ்ப்பாணம் மட்டுமல்ல மட்டக்களப்பு, மலையகத்தில் இருந்தும்   மாணவர்கள் கேட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.   இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பௌதீகவியல் ஆசிரியராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  கே.எஸ் கௌதமனை தொடர்பு கொள்ள: 077 89 00 887 (Viber)

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.