உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர் (Video)


தமிழர் தாயகத்தில் இயங்கி வரும் இயற்கை வழி இயக்கத்தின் ஸ்தாபகரும், சுவீடன் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பியல் துறைகளின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான பேராசிரியர் ந. சிறிஸ்கந்தராஜா உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர் பற்றி பேசுகிறார்.

அவர் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு,

நீரை பொறுத்தவரை நான் 12 ஆண்டுகளாக நீர் தொடர்பான சிந்தனைகளை நீரை ஒருங்கிணைந்த வகையில் மேலாண்மை செய்வதற்கான அணுகுமுறைகளை கற்றுக் கொண்டுள்ளேன்.

அவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கற்றல் துறையாக MSC Level பட்டப்படிப்பொன்றை சுவீடன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து பெற்ற அனுபவங்களோடு இன்றைக்கு இயற்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்றான நீரைப்பற்றிய ஒரு சிந்தனையை எமக்கும் எம்முடைய மக்கள் தொகுதிக்கும் உகந்த வகையில் நல்ல சிந்தனைகளை தேடி இங்கே கொண்டு வந்து சேர்ப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்.

நீரானது இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இயற்கையின் வளமாகும். நாம் விரும்பியோ விரும்பாமலோ நீர் மொத்தமாக மழைவீழ்ச்சியின் மூலம் கிடைக்கின்ற நீரின் அளவு குறையத்தான் போகின்றது என்கிற சிந்தனையும் அதனை நாங்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு விவசாயத்துக்கு தான் பயன்படுத்துகிறோம் என்பது உண்மை.
நீர் எல்லைகளைத் தாண்டி ஓடுகின்ற இயற்கையின் அம்சம் என்கிற வகையில் அது ஒரு நாட்டின் அல்லது ஒரு மாகாணத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் எல்லையைக் கடந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும் போது அங்கே எல்லைகளைக் கடந்த ஒரு போட்டி நிலை ஏற்படுவதனால் தேசங்களுக்கு இடையே நாடுகளுக்கு இடையே ஒரு சிக்கலை உருவாக்குகிற ஒரு பொருளாக இருக்கின்றது.

எல்லாம் எங்களின் விரைவான வளர்ச்சி, மேம்பாடு, அபிவிருத்தி என்பவற்றின் குறியாக ஒரு பக்கம் நாங்கள் எடுக்கின்ற நீரின் அளவின் அதிகரிப்பு மறுபக்கத்தில் எங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் மழைவீழ்ச்சியின் மூலம் அல்லது குளிர் வலய பிரதேசங்களில் பனி கரைவதனால் கிடைக்கின்ற நீரின் அளவும் அளவில் குறைந்து கொண்டு போகின்ற இந்த நிலையில் அதனை சரியான கணிப்புக்களின் அடிப்படையில் பயன்படுத்துவது அவசியமாகின்றது.
இதனை விட வீணாக்குவதும், மாசுபடுத்துவதும் தொடர்கின்றது.

இயல்பாகவே நிலப்பரப்பின் தன்மை காரணமாக இலங்கையின் வடமாகாணம் நீர் தொடர்பில் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கின்றது. வடக்கின் யாழ்ப்பாணத்தின் நீர் தொடர்பில் எங்களுக்கு நீண்டகால அறிவு உள்ளது. ஆகவே இருக்கின்ற நீர்வளங்களை இன்னும் சிதைவடையாமல் பேணுவதற்கான முயற்சிகளை தான் நாங்கள் உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், நீர் தொடர்பிலான திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நீர் தொடர்பில் பேச வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.