கொரோனாவும் இளையோர், முதியோர் உளநலனும்
உண்மையில் முதியோர்களுக்கு கோவிட் - 19 பற்றிய சரியான தகவல்கள் போய்க் கிடைக்கிறது குறைவு. இந்நிலைமையை பூதாகரமாக, மிகவும் பயங்கரமாக பார்க்கின்ற தன்மையை பல முதியோர்களிடம் அவதானித்து இருக்கின்றேன். அவர்களுக்கு கொரோனா தொடர்பில் சரியான தகவல்கள் வழங்குவது என்பது மிகவும் முக்கியமானது.
கொரோனா பரவல் தொடர்பிலான சரியான தகவல்களை குடும்பத்தில் ஒருவர் பெற்றுக் கொண்டு முதியோர்களுக்கு சொல்லுவது நல்ல விடயம்.
உடற்பயிற்சி என்கிற விடயம் முதியோர்களுக்கும் மிகவும் முக்கியமானது. வழிபாடு, பிரார்த்தனை என்பது எல்லா வீடுகளிலும் செய்யக்கூடியது. இவற்றையெல்லாம் செய்வதற்கு முதியோர்களை தூண்டுவதன் மூலம் அவர்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்.
அவர்களோடு நேரமெடுத்து கதைப்பது என்பது இன்னும் முக்கியமான விடயம். முதியோர்களோடு சேர்ந்து பழைய விடயங்களை மீட்டுப் பார்க்கும் போது அவர்களின் மனம் பூரிப்படையும்.
கொரோனாவும் இளையோர் உளவியலும்
கட்டிளம் பருவத்தினரைப் பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காணப்படும்.
தான் சுதந்திரமானவன், இன்னொருவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என நினைக்கும் ஒருவர் கொரோனா காரணமாக அவரின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் போது எதிர்ப்புணர்வு ஏற்படும். அது பெற்றோரோடு பகுதியளவில் தங்கியிருக்கும் இளம் பருவத்தினருக்கு உரிய பிரச்சினை.
இன்று பல நூல் வெளியீடுகள், கருத்தரங்கங்கள், நிகழ்வுகள் எல்லாமே இணைய காட்சி ஊடாக வருகின்றது. இதனையும் இளையோர்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம்.
ஆனால் இன்னொருபுறம் இணையம், ரீவி, போன் என இணையவெளியில் நாம் இருக்கும் நேரம் அதிகரித்து விட்டது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான நேரடித் தொடர்பாடல் குறைந்து விட்டது. பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு திறனை கற்றுக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது.
Post a Comment