2009 க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை கொண்டு போகின்ற ஒரு பக்கமாகத் தான் இருந்தது.  விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எல்லாம் தனியே சுமந்திரனது கருத்துக்கள் அல்ல.  அவை ஒட்டுமொத்த கூட்டமைப்பினுடைய கருத்துக்கள் தான்.  என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளரான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.  அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு,   ஆரம்பத்தில் சம்பந்தர் நாடாளுமன்றில் பயங்கரவாத போரை வெற்றி கொண்ட ஜனாதிபதிக்கு வாழ்த்து கூட சொல்லியிருந்தார். அப்போது நாங்கள் நினைத்துக் கொண்டோம். இது ஒரு ராஜதந்திர நகர்வு, சாணக்கியமாக இருக்கும். இப்படிச் சொல்லி இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டப் போகிறார்.   நாங்கள் கையால் கொண்டு போய் கொடுத்தவர்களை எல்லாம் மீட்டு தரப்போகிறார் என்று தான் நினைத்தோம். ஐயா எப்பவும் சாணக்கியம், ராஜதந்திரம் என்று தான் சொல்லுவார்.  என்னை இவர்கள் அரசியலுக்கு கொண்டு வந்து விட்ட பின்னர் எனது வீடு தாக்கப்பட்ட போது கூட  கூட்டமைப்பினர் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர்.  அனந்தியை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என இலங்கை அரச ஆதரவு ஊடகங்களில் கருத்துக்கள் வெளியான போது போரால் பாதிக்கப்பட்ட  பெண்ணாக அரசியலில் நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அறிந்த அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதர்கள் என் மீது கரிசனை கொண்டிருந்தனர்.  அப்போது அனந்தியை புனர்வாழ்வுக்கு கொண்டு போக இடமிருக்கு என்று சுமந்திரன் சொன்னார். ஜெனீவாவில் வைத்து இனவழிப்பு என்று பேச வேண்டாம் அனந்தி எனவும் சுமந்திரன் கூறினார். ஆனால், மிதிவெடி மாதிரி அரசியலில் மிதித்து விட்டேன். எடுத்தால் வெடிக்கும் எனவும் தெரியும். அதனால் எவ்வளவு வல்லமையாக எதிர்த்துப் போராடிக் கொண்டு நிற்க முடியுமோ அப்படித்தான் இன்று வரை நிற்கிறேன்.  பிள்ளைகளை போரில் இழந்த பெற்றோர்கள் இன்றும்  என்னிடம் கேட்பது, நாங்கள் பிள்ளைகளை தான் இழந்து விட்டோம் ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. அந்த தீர்வுக்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொல்லும் எத்தனையோ பெற்றார்களை நான் பார்த்திருக்கிறேன்.  இன்றும் புனர்வாழ்வுக்கு போன எத்தனையோ முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். எங்களுக்கு நடந்த உண்மைகளை சொல்வதற்கு இன்றும் சரியான தளம் இல்லாத நிலை தான் உள்ளது. ஏனெனில் அச்சுறுத்தல் இன்றும் உள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குங்கள். நாங்களே எங்களுக்கு நடந்த உண்மைகளை எழுதுகின்றோம்.  ஆவணப்படுத்துகின்றோம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.