தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகிச் செல்கிறார்களா? (Video)
2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் சிங்களக் கட்சிகளில் போட்டியிட்டவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்களே அது பற்றி கேட்டபோது அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் பின்வருமாறு பதிலளித்தார்.
இதற்கான முழுப் பொறுப்பையும் கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளாக காணப்பட்ட கூட்டமைப்பினர் தான் ஏற்க வேண்டும். இவர்கள் தான் இந்த அரசியல் சீரழிந்த நிலைக்கு வரக் காரணம்.
இன்னொரு வளமாக சொன்னால் கூட்டமைப்பிடம் அந்த திறன் இல்லை. நாங்கள் திரும்பத் திரும்ப மீன் குஞ்சை பறக்கச் சொல்லிக் கேட்கிறோம். அவர்களால் இவ்வளவு தான் ஏலும். அவர்கள் தொழில்சார் அரசியல்வாதிகளாகத் தான் இருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் ஒரு ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தை கையாளத் தேவையான புரட்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இல்லை. இது ஒரு வகையில் ஆயுதப் போராட்டத்தின் விளைவும் தான்.
முழுமையான நேர்காணலை காணொளியில் பாருங்கள்...
(இந்நேர்காணல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது)
Post a Comment