ஈழத்தமிழர் - சீனா உறவின் அவசியம்





சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பு என்பது அந்த தேசிய இனத்தின் தந்திரோபாயத்திலே தங்கியுள்ளது.  அத்தகைய தந்திரோபாயங்களை வகுப்பதும் அதில் தங்கியிருப்பதும் அதற்காகவே போராடுவதும் தேசிய இனங்களின் அரசியல் தலைமைகளிலேயே தங்கியுள்ளது.  அரசியல் தலைமைகள் அதீத புத்திசாலிகளாகவோஇ அரசியல் விற்பன்னர்களாகவோ இருப்பதில்லை. அவற்றை உருவாக்கும் அறிவை தாம் வாழும் சமூகத்தின் பாற்பட்டும் சர்வதேச சூழலிலிருந்தும் பெற்றே உலகிலுள்ள அரசியல் தலைமைகள்  மிளிர்கின்றன.  அந்த வரிசையில் இலங்கைத்தமிழர் பின்பற்ற வேண்டிய  மிக முக்கியமான உபாயங்களில் ஒன்றாக நாடுகளுடனான நட்புறவு காணப்படுகின்றது.  பிராந்திய அரசியலும் சர்வதேச தளத்திலும் நாடுகளுடனான நட்பே தேசிய இனங்களின் இருப்புக்கு பாதுகாப்பளிக்கக்கூடியது.  அந்த வகையில் இலங்கைத் தமிழரும் சீனாவுக்குமான உறவினை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 சீனாவுடனான நட்புறவு இந்தியாவுக்கு விரோதமானது என்ற கணக்கறிக்கை ஒன்றினை தமிழ் அரசியல் தலைமைகள் வைத்துள்ளன.  இந்திய-இலங்கை தமிழர் நட்புறவு  மிக நீண்டது.  வலிமையானது.  புவிசார் அரசியல் தளத்தில் மிக இறுக்கமானது.  ஆனால் சீனாவுடனான  நட்பு  மலர்வதென்பது சர்வதேச அளவில் மட்டுமல்ல பிராந்திய மட்டத்திலும் உள்நாட்டு மட்டத்திலும் சமநிலை வலுவடையக்கூடியளவுக்கு அமையக்கூடியது.  அதனைவிட பொருளாதார தளத்திலும் நன்மை வகிக்கக்கூடியதாக சீன-இலங்கை தமிழர் நட்புறவு அமைய வாய்ப்புள்ளது.

 இன்றைய உலக ஒழுங்கில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்பவையோ பகைத்துக் கொள்பவையோ கிடையாது.  அவற்றை மீறிக் கொண்டு மோதுபவையாக அமைந்தால் அதன் அர்த்தம் பொருளாதார உறவு சாராத நாடுகளுக்கிடையிலான மோதலாகவே அது அமையும்.  காரணம் அரசுகள் ஒன்றில் ஒன்று அதிகமாக பொருளாதார ரீதியில் தங்கியுள்ளன.  கடன்இ நன்கொடைஇ உற்பத்திஇ வர்த்தகம்இ மற்றும் சந்தை எனும் தளத்தில் அதிக முக்கியத்துவம் உடைய உறவு வளர்ந்துள்ளது.  இந்த யுகத்தில் நட்புறவு என்பது நாடுகளுக்கு மட்டுமுரியவையல்ல.  தேசிய இனங்களின் நலனுக்குமானவை.

 சீனாவுடனான நட்புறவு முதலில் உள்நாட்டு மட்டத்தில் பலமானதாக அமையும்.  இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பிரித்தானியாவிலிருந்துஇ அமெரிக்காவிடம் மாறியது போல் தற்போது சீனாவுடன் நெருக்கமாகியுள்ளது.  இந்த சந்தர்ப்பத்தில் சீனாவின் செல்வாக்கு தனித்து தென் இலங்கையை மட்டும் பிரதிபலிக்கும் போது வடக்கு கிழக்கு அந்நியப்படுத்தப்படும்.  சீனாவின் பலம்  தென் இலங்கையின் பலமாகப் பார்க்கப்படுவதை உடைக்க வேண்டும். இவற்றுக்கு இலங்கை தமிழர் சீனாவுடன் நட்புறவை வைத்துக்கொள்ளுதல் தவிர்க்கமுடியாதது.  உலகத்திலுள்ள எல்லா நாடுகளுடனும் நெருக்கமான உறவை இலங்கை தமிழர் கொள்வதன் மூலம் தேசிய இன அடையாளத்தினை பாதுகாக்க முடியும்.

 இரண்டாவது மிக முக்கியமான விடயம் சீனாவுடனான நட்புறவு இந்தியாவை இலங்கை தமிழர் மீது அதிக கரிசனையை காட்டச் செய்யும். தென் இலங்கை அவ்வாறே தனது பலத்தையும் நட்பினூடாக சமநிலையையும் தக்கவைத்து வருகிறது. இந்தியாவும் சீனாவும் இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார இராணுவ பலத்தில் தவிர்க்க முடியாத சக்திகள் என்பதை மறுக்க முடியாது.

  21ஆம் நூற்றாண்டில் இந்திய-சீன நட்புறவினூடாகவே உலக நாடுகள் இயங்க முயலுகிறது.  இவற்றை தேசிய இனம் என்ற அடிப்படையில் இலங்கைத்தமிழர் பயன்படுத்த வேண்டும்.  தமிழ் தலைமைகளை நோக்கி சீனாவும் பல முயற்சிகளை நட்புறவின் அடிப்படையில் மேற்கொண்டு வந்தது.  குறிப்பாக சீன தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கு கிழக்கு நோக்கி வருதல், தமிழ்த் தலைவர்களை மற்றும் ஊடகவியலாளர்களை சீனாவுக்கு அழைத்தமை, மற்றும் புலமைப் பரிசில்களை அதிகம் வழங்கிவருபவை என்பவற்றை குறிப்பிட முடியும்.

சர்வதேச அரசியலிலும் சீனாவின் முக்கியத்துவம் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் தமிழர்-சீனா உறவு மிக முக்கியமானது.    இதனை தமிழ் தலைமைகள் பரிசீலிப்பது அவசியமான மாறுதலாக அமையும்.

கலாநிதி கே.ரி கணேசலிங்கம் 
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.